மூளாய் வைத்தியசாலை நிலைமைகள் ஆராய்வு, நோயாளர்காவு வண்டி அன்பளிப்பு

362

 

யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் மூளாய் பாணாவட்டிப் பகுதியில் மிக அண்மைக்காலத்தில் திறக்கப்;பட்ட வைத்தியசாலைக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) மற்றும் திருமதி. ஜெயகுமார் வசந்தி, புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண உருப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்த்தன் ஆகியோர் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இவ் நிகழ்வின்போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இவர்களை வரவேற்றதோடு வைத்திய சாலையின் தேவைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது வைத்தியசாலையை அழகுபடுத்தும் பொருட்டு வைத்திய சாலையின் முன் பகுதியில் சிறு பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பிலான கருத்துக்களையும் அவர்கள் முன்வைத்தனர் இவ் விடயம் தொடர்பில் குறித்த குழுவினர் இவ் ஆண்டுக்கு முன்னதாக மேற்படி திட்டம் நிறைவுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த திரு.சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) அவர்கள் அவ் நாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் மேற்படி வைத்தியசாலைக்கு நோயாளிகளை காவிச் செல்லும் வண்டி ஒன்றினையும் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.moolai hospital  (tamilnewsnet) (1) (640x479)moolai hospital  (tamilnewsnet) (2) (640x478)moolai hospital  (tamilnewsnet) (3) (640x470)moolai hospital  (tamilnewsnet) (4) (640x453)moolai hospital  (tamilnewsnet) (5) (640x480)moolai hospital  (tamilnewsnet) (6) (640x470)moolai hospital  (tamilnewsnet) (7) (640x472)moolai hospital  (tamilnewsnet) (640x480)

SHARE