மேக்குல்லம் மீதான சூதாட்ட குற்றச்சாட்டு: நியூசிலாந்து கிரிக்கெட் விளக்கம்

544

நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மேக்குல்லம். 2008–ம் ஆண்டு இவரை சூதாட்ட தரகர்கள் 2 முறை தொடர்பு கொண்டு மோசமாக விளையாடுமாறு கேட்டு உள்ளனர். இதற்காக அவரிடம் ரூ.1.08 கோடி பேரம் பேசப்பட்டது.

இந்த தகவலை மேக்குல்லம் தெரிவித்ததாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்தது. இது தொடர்பாக ஐ.சி.சி. தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும், தான் ஆட்டத்தை பிக்சிங் செய்ய மறுத்து விட்டதாகவும் மேக்குல்லம் குறிப்பிட்டதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஐ.சி.சி . ஊழல் தடுப்பு குழுவிடம் மேக்குல்லம் வாக்கு மூலம் கொடுத்து இருப்பதாக இங்கிலாந்து மீடியா தெரிவித்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாகும். மேக்குல்லமிடம் ஐ.சி.சி. விசாரணை நடத்தவில்லை. அவர் எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடவில்லை. கேப்டனான அவர் மீது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 சதவீதம் நம்பிக்கை வைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE