மேற்கத்திய நாடுகளில் ஓநாய் தாக்குதல் நடத்துவோம் – மிரட்டும் அல்கொய்தா

414
மேற்கத்திய நாடுகளை குறிவைத்து ஓநாய் தாக்குதல் (உல்ஃப் அட்டாக்- திடீர் தாக்குதல்) நடத்த அல்கொய்தாவின் ஏமன் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக சைட் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திலும், கொஷார் சூப்பர் மார்க்கெட்டிலும் சமீபத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஏமன் நாட்டுப் பிரிவினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், இன்னும் பல தாக்குதல் நடத்த திட்டமிட்டுப்பதாகவும், சர்வதே விமானங்களை தகர்ப்பது அல்லது வாஷிங்டனை அதிர வைத்தது போன்ற ஓநாய் தாக்குதல்கள் நடத்தபடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இதற்காக நாங்கள் அயராது பணியாற்றி வருகிறோம் என்றும் எங்கள் உழைப்பையும் அதிலிருக்கும் அபாயத்தையும் எங்களது எதிரிகள் நன்கு அறிவார்கள் எனவும் தீவிரவாதிகள் கூறியதாக சைட் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

SHARE