மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பார்த்து பயப்பட தேவையில்லை: விளாடிமிர் புதின்

348
மேற்கத்திய நாடுகள் எங்களை பார்த்து பயப்பட தேவையில்லை என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் இத்தாலி செல்ல உள்ள நிலையில் அந்நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விளாடிமிர் புதின் கூறியுள்ளதாவது, “உலக மக்களின் மனநிலையில் நிரைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான போரை மக்கள் விரும்ப மாட்டார்கள். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பார்த்து பயப்பட தேவையில்லை. எங்களுக்கு போரில் ஈடுபடுவதை விட பல முக்கியமான வேலைகள் உள்ளன. மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனால் தான் நோட்ட நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்பது போன்ற கற்பனைகளை செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு உக்ரேனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்ட பிறகு, ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது

SHARE