மேற்குலக வெள்ளையின பயங்கரவாதிகளின் காலனிய காட்டுமிராண்டித்தனம்

337

 

பிரெஞ்சு அரச பயங்கரவாதம்: அல்ஜீரியாவில் பிரான்ஸ் அறிமுகப் படுத்திய உயர்ந்த நாகரிகம் இது தான்.
******
இவை, காலனிய வரலாற்றுக் காலகட்டத்திலும், 2 ம் உலகப்போர் காலத்திலும், “நாகரிகமடைந்த” பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு சில உதாரணங்கள். இன்றைய அல்கைதா, ISIS போன்ற பயங்கரவாத இயக்கங்களின் முன்னோடிகளான ஐரோப்பிய எஜமானர்களும் அதே மாதிரியான பயங்கரவாத செயல்களை செய்துள்ளனர். தாய் பத்தடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயாதா?
*******
மலேசியாவில், பிரிட்டனின் காலனிய பயங்கரவாதம்! அவசரகால சட்ட காலத்தில், மலேசிய கம்யூனிஸ்டுகளின் தலைகளை வெட்டி மகிழ்ந்த பிரிட்டிஷ் படையினர்.
2 ம் உலகப்போர் நடந்த காலத்தில், மலேசியாவை ஆக்கிரமித்த ஜப்பானியப் படைகளுக்கு எதிராக, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தது. அப்போது பிரிட்டன் அவர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவியது.
ஆனால், போர் முடிந்த பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி மலேசியாவின் இயற்கை வளங்களை, குறிப்பாக ரப்பர் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்க விரும்பியது. அதனால், பிரிட்டிஷ் காலனிய இராணுவத்திற்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையில் போர் மூண்டது.
உண்மையில் மலேசியாவின் இயற்கை வளங்களை சுரண்டிய பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்காகவே பிரிட்டன் யுத்தத்தில் குதித்தது. காப்புறுதி நிறுவனங்கள் பணம் தர மறுக்கும் என்ற காரணத்தினால், மலேசியாவில் உள்நாட்டுப் போர் நடக்கும் விடயம் மூடி மறைக்கப் பட்டது. அதற்குப் பதிலாக “அவசர கால நிலைமை” பிரகடனம் செய்யப் பட்டது.
******
இவர்கள் சிரியாவின் ISIS பயங்கரவாதிகள் அல்லர். அவர்களுக்கு முன்னோடிகளான ஜெர்மன் நாஸி பயங்கரவாதிகள்.
 2 ம் உலகப்போர் காலத்தில், முன்னாள் யூகோஸ்லேவியாவின் ஸ்லோவேனியா பகுதியை நாஸி படையினர் ஆக்கிரமித்திருந்தனர். அப்போது ஜெர்மன் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து, கம்யூனிச கெரில்லாக்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்.
தமக்கு சவாலாக விளங்கிய கம்யூனிசப் போராளிகளை பிடித்து, கோடாலியால் தலைகளை வெட்டி, அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
ஐரோப்பிய நாசிகளாக இருந்தாலும், சிரியாவில் ISIS ஆக இருந்தாலும், உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றனர்.பாசிஸ்டுகளுக்கு இடையில் இன, மத, மொழி வேறுபாடு எதுவும் கிடையாது.

German Atrocities in the Balkans: German-Occupied Slovenia, 1944

ISIS காட்டுமிராண்டிகள் ஒருவரை உயிரோடு எரித்தார்கள்.
அவர்களின் முன்னோடிகளான காட்டுமிராண்டி அமெரிக்க நிறவெறியர்கள், ஆயிரக்கணக்கான கருப்பின மக்களை உயிரோடு எரித்தார்கள்.
 அமெரிக்க அடிவருடிகளுக்கு இது சமர்ப்பணம்:
You might also like:
SHARE