மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.

264

மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.

வெகு விரைவில் ஹிருனிகாவின் திருமணம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

heruni

பிரபல ஆடையலங்கார கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஒருவரே ஹிருனிகாவின் கரம் பற்ற உள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதல் தொடர்பு காரணமாக நடைபெறவுள்ள இந்த திருமணத்தில், ஓர் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்க உள்ளார்.

திருமண வைபவத்திற்கு இரண்டு குடும்பங்களினதும் மிக நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஹிருனிகா பிரேமசந்திர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் விண்ணப்பம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE