மே.தீவுகளை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து!

113

 

ஆன்டிகுவாவில் நடந்த ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.

நியூசிலாந்து மகளிர் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது. தொடக்க வீராங்கனைகள் ரஷடா வில்லியம்ஸ் 19 ஓட்டங்களும், மெக்லீன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீராங்கனைகள் சொதப்பிய நிலையில் சினிலே ஹென்றி 34 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசினார். கய்ஷோனா நைட் தனது பங்குக்கு 36 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர், பிரன் ஜோன்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளும் ரோவ் மற்றும் ஜென்சென் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 33 ஓவரிகளில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. DLS விதிமுறைப்படி நியூசிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அணியின் தொடக்க வீராங்கனை பேட்ஸ் 51 ஓட்டங்களும், அமேலியா கெர்47 ஓட்டங்களும் விளாசினர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹயலே மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், அஃபி பிளெட்சர், சினிலே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

SHARE