மைக்கேல் கிளார்க்கு வாழ்த்து தெரிவித்த கோஹ்லி

160
ஆஷஸ் தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க்கு, விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் முடிந்த ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி மிக மோசமான முறையில் தோல்வியடைந்து தொடரை 3-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது.இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக ஆஷஸ் தொடருக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளார்க் அறிவித்தார்.இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் கிளார்க்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

“கிரிக்கெட் பயணத்தில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயல்பட்டதுடன், பல சாதனைகளை குவித்துள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

கோஹ்லிக்கு நன்றி தெரிவித்த கிளார்க், “இந்திய அணி வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

SHARE