மைக்’ மோகன் கதையில் நடித்த தனுஷ் 

358



70-80களில் மைக் மோகன் நடித்த ‘கிளிஞ்சல்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை‘, ‘விதி‘ போன்ற பல படங்களில் வெற்றியாக அமைந்தது. அவரை சில்வர் ஜூப்ளி ஹீரோ என்று கோலிவுட்டில் குறிப்பிட்டனர். 90க்கு பிறகு அவரது மார்க்கெட் டல்லடித்துவிட்டது. வில்லனாக சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்க மறுத்துவிட்டவர். சொந்த செலவில் ‘சுட்டபழம்‘ படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து, கையை சுட்டுக்கொண்டதுதான் மிச்சம். மோகனுக்கு பெரும்பாலான படங்களில் டப்பிங் குரல் கொடுத்தவர் பின்னணி பாடகர் சுரேந்தர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மோகனுக்கு டப்பிங் பேச மாட்டேன் என சுரேந்தர் கூறினார். பிறகு மோகனே டப்பிங் பேசி நடித்தார். அது எடுபடவில்லை. இந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது இதை பின்னணியாக வைத்துத்தான் ‘ஷமிதாப்’ இந்தி படத்தை இயக்கி இருக்கிறார் பால்கி. பிரபல நடிகர் வேடத்தில் தனுஷ் நடிக்க டப்பிங் பேசும் கலைஞராக அமிதாப் நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்தான் படத்தின் மைய கருவாம். தனுஷ் ஜோடியாக கமலின் 2வது மகள் அக்ஷரா நடித்திருக்கிறார்.

SHARE