மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்கள்! மருத்துவமனையில் எடுத்த நெகிழவைக்கும் புகைப்படம்

202
இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் பிடியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சர்ரே அணியின் வீரர்கள் பர்ன்ஸ்– ஹென்ரிக்ஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.இதில் ஹென்ரிக்சுக்கு 3 இடங்களில் தாடை கிழிந்தது. பர்ன்சுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது

பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த படியே ரோரி பர்ன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இதயத்தை நெகிழவைக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் சக வீரர் ஹென்ரிக்ஸ் பக்கத்து படுக்கையில் படுத்து இருக்கிறார். இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி, நாங்கள் நலமாக இருக்கிறோம் என்று சொல்வது போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

இவர்கள் விரைவில் குணமடைய இங்கிலாந்து வீரர்களான பீட்டர்சன், அலெஸ்டர் குக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE