ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் முடிவினை ஏற்றுக் கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.
இலங்கை மக்கள் சிறந்த முறையில் வாக்களித்து ஜனநாயக உரிமைகளை உறுதி செய்து கொண்டுள்ளன.
அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமைக்காக இலங்கை தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பினை பாராட்டுகின்றோம் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.