எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகப் பற்றற்ற ரீதியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்ழ மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பெரும்பாலும் எட்டு முதல் பத்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.