மைத்திரியிடம் தனது எதிர்காலத்தை ஒப்படைத்தார் மஹிந்த!

146

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Mahinda_Maithri_3

கொழும்பு 7 பெஜட் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் என்ன விடயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டனர் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நேற்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற சந்திப்பு சுமார் அரை மணித்தியாலம் வரையில் நீடித்தது என தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரியிடம் தனது எதிர்காலத்தை ஒப்படைத்தார் மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இரவு விஜேராமையில் அமைந்துள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டவை தொடர்பில் ஒரு சில தகவல் மாத்திரம் தற்போது வெளியாகியுள்ளன.

மிக சுமுகமாக இடம்பெற்ற இச்சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்சவின் எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்கால அரசியல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வினவிய போது,

கட்சியின் தலைவர் ஜனாதிபதி என்பதனால் தன் எதிர்கால அரசியல் தொடர்பில் தீர்மானம் மேற்கெள்ளும் பொறுப்பினை அவரிடம் ஒப்படைப்பதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

அங்கு ராஜபக்சவின் அரசியல் பயணம் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளாத நிலையில் ஒன்றரை மணித்தியாளம் மிகவும் சுமுகமாக கலந்துரையாடலாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE