மைத்திரி ஆட்டம் ஆரம்பம்.

330

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள பௌத்த ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் செயற்படுகின்றாரா என்ற கேள்வியை கொழும்பு ஊடகமொன்று எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத நல்லிணக்கத்திற்கும், இன ஒருமைப்பாட்டுக்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக புகழாரம் சூட்டப்பட்டு வரும் நிலையில் இந்த மாறுபட்ட விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.

Maithripala_Sirisena_Sri_Lanka_President_AP_650x488

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணைய தளம் மற்றும் முகப் புத்தகம் ஆகியவற்றின் படங்கள் ஏனைய இன மத சமூகத்தை உதாசீனம் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் பௌத்த பிக்குகளை சூழவிருப்பதான படம் பிரசூரிக்கப்பட்டு உள்ளதாகவும், அது சிங்கள பௌத்த ஆதிக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணைய தளத்தில் காணப்படும் நான்கு புகைப்படங்களும் பௌத்த பிக்குகளுடன் இருப்பதனைப் போன்றே காணப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகப் புத்தகத்தில் ஒன்பது பௌத்த பிக்குகள் புடைசூழ ஜனாதிபதி காட்சியளிப்பதனைப் போன்றே கவர்பேஜில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் காணப்படும் ஒர் படத்தில் ஜனாதிபதியின் பின்னணியில் தேசிய கொடி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய கொடியானது க்ரொப் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் வாள் ஏந்திய சிங்கம் அதாவது சிங்கள பௌத்த மக்களை பிரதிபலிக்கும் பகுதியின் பின்னணி மட்டுமே உள்ளடக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் இந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ளடக்கப்படவில்லை.

SHARE