மொனராகல, சியம்பலாண்டுவ, கரந்தகொட மேற்குப் பிரதேசத்தில் 17 வயதான யுவதி தமது வீட்டிற்குள் மரணமான சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

152

மொனராகல, சியம்பலாண்டுவ, கரந்தகொட மேற்குப் பிரதேசத்தில் 17 வயதான யுவதி தமது வீட்டிற்குள் மரணமான சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யுவதி வீட்டில் தனித்திருந்த வேளையில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோர் விவசாய நடவடிக்கைகளுக்காக வெளியே சென்று வீடு திரும்பிய போது, யுவதி கட்டிலில் கிடந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவ மனைதரப்பினர் சோதனை மேற்கொண்டபோது அவர் முன்னரே மரணமாகியிருந்தமை தெரியவந்தது.
இந்த யுவதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரணமானவரின் சடலம் தற்போது, பிரேத பரிசோதனைக்காக சியம்பலாண்டுவ மருத்துவ மனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

SHARE