மொஸ்கோவுக்கு அழைக்கப்பட்ட இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.

464

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ரஸ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே, சிறிலங்கா இராணுவத் தளபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Chrisanthe-de-Silva-300x200

இந்தப் பயணத்தின் போது, இருதுரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது குறித்த பேச்சுக்களில் அவர் ஈடுபடுவார் என்று தெரியவருகிறது. லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அடுத்தவாரமே கொழும்பு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா படைகளுக்கு பாதுகாப்பு ரீதியாக ரஸ்யா உதவிகளை அளித்து வந்த்து குறிப்பிடத்தக்கது.

SHARE