மோடியை ஆதரிக்கும் காங்கிரசார்: ஆய்வில் சுவாரசியம்

294

வாஷிங்டன் : நரேந்திர மோடி தலைமையிலான பாஜ, பதவியேற்ற ஓராண்டில் பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காங், தொண்டர்கள் உள்ளிட்ட 87 சதவீதம் இந்தியர்கள் மோடியை ஆதரிப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பியூ நிறுவனம் சார்பில் 2015ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 2452 இந்தியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மோடியின் கொள்கைகள் மற்றும் ஆட்சிக்கு அப்பாற்பட்டு, அவருக்கு 87 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் இவர்களில் காலம் காலமாக காங்கிரசில் இருந்தவர்களும் அடங்குவர். 2015ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் நடைபெற்ற மதகலவரங்கள், 2014ம் ஆண்டில் காங்., ஆட்சியின் போது நடைபெற்ற மதக்கலவரங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது

கிராமப்புற பகுதிகளில் காங்கிரசை விட மோடி மற்றும் பாஜ,விற்கே செல்வாக்கு அதிகமாக உள்ளது என ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தில் 6 காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். க்ளீன் இந்தியா திட்டத்திற்கு 66 சதவீதத்தினரும், வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு 62 சதவீதத்தினரும், ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்கு 61 சதவீதம் பேரும், பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு 61 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான காங்கிரசார் பயங்கரவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மத ரீதியான விவகாரங்களில் மட்டுமே மோடிக்கு ஆதரவு குறைந்துள்ளது.

நகர்புறங்களில் காங்., 52 சதவீதத்தினரும், பாஜ,விற்கு 83 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம் கிராமப்புறங்களில் பாஜ, 89 சதவீதத்தினரும், 64 சதவீதம் பேர் காங்,க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் மோடிக்கு 89 சதவீதத்தினரும், காங், துணைத் தலைவர் ராகுலுக்கு 66 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நகரங்களில் மோடிக்கு 84 சதவீதம் பேரும், ராகுலுக்கு 53 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

SHARE