மோடியை எச்சரிக்கும் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரர்!

299

 

கொழும்பு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது. அவர் எமது பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி போன்று அவரும் தலையீடு செய்ய முனைந்தால், தமிழர் பிரச்னை மீண்டும் கிளம்பும். ஆயிரக்கணக்கான இலங்கைப் படையினரும், 1500 இந்தியப் படையினரும், போரில் மரணமாகியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துடன் மோடி உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியைப் பேண வேண்டும். போர் முடிவுக்கு வந்த பின்னர், இங்கு அமைதி நிலவுகிறது. தமிழர்கள் மீன்பிடிக்கிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்.

பொருளாதாரமும், சுற்றுலாத்துறையும் நன்றாக இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்று, தலையீடு செய்யக் கூடாது என்று நீங்கள் அவருக்கு கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE