மோடியை போல் நடித்துக் காட்டி அசத்திய யுவராஜ் சிங்

329
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், பிரதமர் மோடியை வாழ்த்தி வெல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் டப்ஸ்மேஷ் ஆப் வைரலாக பரவியது. இதில் பல பிரபலங்கள் வித்தியாசமான வசனங்களுக்கு ஏற்றவாற நடித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடத்தை நிறைவு செய்த இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், யுவராஜ் சிங் வெல்பி (வீடியோ + செல்பி= வெல்பி) வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மோடியின் சிறிய உரைக்கு ஏற்றவாறு நடித்து, அதை தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்த மோடி, “உங்கள் வாழ்த்துக்கு நன்றி. கிரிக்கெட் களத்திலும், கிரிக்கெட் களத்திற்கு வெளியிலும் உங்கள் திறமை அபாரமாக உள்ளது. இதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE