மோதவிருக்கும் டெல்லி- மும்பை அணிகள்: வெல்லப்போவது யார்?

330
டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் ஐ.பி.எல் போட்டியின் 21–வது ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.இதில் டுமினி தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ்– ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 5 விக்கெட்டிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ஓட்டங்களிலும் வென்றது. சென்னை சூப்பர் கிங்சிடம் 1 ஓட்டங்களிலும், ராஜஸ்தான் ராயல்சிடம் 3 விக்கெட்டிலும், கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட்டிலும் தோற்றது.

மும்பை இந்தியன்ஸ் 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக முதல் 4 ஆட்டத்தில் (கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை) தோற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 18 ஓட்டங்களில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

SHARE