யாத்திரீகர்கள் குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

28

 

ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகளை இடைநிறுத்தவும் முறையான ஒதுக்கீட்டிற்காக பாதிக்கப்பட்ட பயண முகவரை சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய (Saudi Arabia) அரசாங்கம் யாத்திரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கீட்டை வழங்குகிறது.

இந்தாண்டு இலங்கையில் இருந்து 3,500 யாத்திரீகர்கள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பயண முகவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இடைநீக்கம்

இந்தநிலையில் பயண முகவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹஜ் குழு, தனது பயண உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு தன்னிச்சையாக இரத்து செய்துள்ளதாக பயண முகவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மனுதாரர் தனது மனுவில் இரண்டு ஆண்டுகளுக்கு தனது உரிமத்தை இடைநீக்கம் செய்வதற்கான குழுவின் முடிவு பாதுகாப்பு பிணைய நிதி காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 2024ஆம் ஆண்டிற்கான பயண முகவராக தன்னை பதிவு செய்யுமாறும், டிசம்பர் 2023இல் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீட்டை இடைநிறுத்துமாறும் மனுதாரர் தரப்பு கோரியுள்ளது.

SHARE