யானைத் தந்தங்களுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது

15

 

யானைத் தந்தங்களுடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நேற்று (01) மாலை தர்கா நகர் (Dharga Town), தல்கஸ்கொடபிடிய பிரதேசத்தில் வைத்து பேருவளை பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு கோடி ரூபா பெறுமதியான யானைத் தந்தங்களை நபரொருவர் விற்பனை செய்ய முயற்சிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

முதற்கட்ட விசாரணை
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் முன்னர் இராணுவ அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் தெரிய வந்துள்ளது.

SHARE