யார் படமும் ஹிட் இல்லையா? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

299

தமிழ் சினிமாவை ஆளும் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் தான். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் ஆகியோர் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிக்கையில் சின்ன பட்ஜெட் படங்களை தவிர வேறு எந்த படமும் ஹிட் இல்லை என கூறியுள்ளனர்.

விஜய் நடித்த தலைவா, ஜில்லா தோல்வியை தழுவ, கத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், எதிர்ப்பார்த்த வசூலை இப்படம் செய்யவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல் அஜித் நடித்த ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் படம் ரசிகர்களை கவர்ந்தாலும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இன்னும் படத்தின் வசூல் குறித்து எந்த தகவலும் கூறவில்லை.

சூர்யா அஞ்சான், மாஸ் பற்றி நாங்கள் ஏதும் கூற தேவையில்லை, தனுஷின் அனேகன், விக்ரமின் ஐ படங்கள் வெற்றியா? தோல்வியா? என இன்றும் பட்டிமன்றம் நடந்து வருகின்றது. விஜய் சேதுபதி, ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால் என எல்லோரின் சமீபத்திய படங்களும் ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கையில் சமீபத்தில் காஞ்சனா-2 படம் மட்டுமே எல்லா தரப்பினரையும் வசூலில் திருப்தி படுத்திய படம் என கூறப்படுகின்றது

SHARE