யாழில் தற்போது போதைப்பொருட்கள் மிக இலகுவாக கிடைக்கிறது-மாவா” என்னும் போதைப்பொருளை அடித்து மல்லாகத்தில் குப்புற பிரண்ட மாணவர்கள்,

353

 

யாழில் தற்போது போதைப்பொருட்கள் மிக இலகுவாக கிடைக்கிறது. அதிலும் “மாவா என்னும் பொதைப் பொருள் அரிசி பருப்பு கடைகளில் இருப்பதுபோல சாதாரண கடைகளில் கூட விற்க்கப்படுகிறது. பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் உள்ள கடைகளில் தான் அதிகமாக மாவா விற்கப்பட்டு வருகிறது. மேலும் இது மாணவர்களை குறிவைத்தே விற்க்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க , கடந்த சில தினங்களுக்கு முன்னர் மல்லாகத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளியில், பயிலும் 2 உயர்தர மாணவர்கள் மாவா வை அடித்துள்ளார்கள்.

74a2261b23d44d9548e1dfb5a32eb0d5 1896-kissing in bush

இதனால் அவர்கள் சற்று நேரத்தில் எல்லாம் வகுப்பறையில் , குப்பிறப் பிரண்டு விழுந்து எழுந்துள்ளார்கள். இவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்த ஆசிரியரைப் பார்த்து அம்மாணவர்கள் கெக்கட்டம் இட்டு சிரித்தும் உள்ளார்கள். போதையில் இவர்களுக்கு எல்லாம் விளையாட்டாக தெரிந்துள்ளது. குறித்த ஆசியர் இவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். யாழில் உள்ள பெற்றோர்கள் இதுதொடர்பாக கடும் விசனம் தெரிவித்து வருகிறார்கள். தமது ஆண் பிள்ளைகளை கொழும்புக்கு அனுப்பி அங்கே படிக்க வைப்பது நல்லது என்று அவர்கள் பேசிவருகிறார்கள் என்றும் அறியப்படுகிறது.

போர் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சமூகமே சீரழிந்து போகிறதே

SHARE