யாழில் MLT மாணவி தற்கொலை. கணவன் மீது குற்றம் சுமத்தும் பெற்றோர்!

110

தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்த யுவதி சிகிச்சை பலனின்றி 09.07.2015 உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மருத்துவதாதி கற்கைநெறியொன்றை (MLT) பயின்று வந்த லோறன்ஸ் அனா எப்சியா (வயது-24) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

முல்லைத்தீவு செல்வபுரத்தை சேர்ந்த இந்த மாணவி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்திருந்தார். இருவரும் யாழ் நகரத்திற்கு அண்மையாக வீடெடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையிலேயே இந்த தற்கொலை நடந்துள்ளது.

காதலித்து திருமணம் செய்தபோதும், இருவருக்குமிடையில் தினம்தினம் சண்டை நடப்பதாக அறிய முடிகிறது. தனது மனைவி மீது வைத்தியர் அதீத கட்டுப்பாடும், கண்காணிப்பும் வைத்திருந்ததும் சச்சரவிற்கான காரணங்களிலொன்றாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே திடீரென தனக்குதானே தீமூட்டியுள்ளார். வைத்தியசாலையில் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் இதனை தானே செய்ததாக மாணவி கூறியிருக்கிறார். எனினும், இறக்கும் தறுவாயில் தன்மீது எண்ணெய் ஊற்றிகொளுத்தப்பட்டதாக மாணவி கூறியதாக மாணவியின் உறவினர்கள் செய்தியாளரிடம் கூறியுள்ளனர்.

மாணவியின் முதுகுப்பகுதியில் தீமூட்டப்பட்டுள்ளதால் அதனை மாணவி செய்திருக்க வாய்ப்பில்லையென்றும், இது திட்டமிட்ட கொலையென்றும் மாணவியின் உறவினர்களால் கூறப்படுகிறது.

santhan
3

SHARE