யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை-யாழில் இனி சட்டமொழுங்கை மேம்படுத்தப்போகின்றதாம் காவல்துறை!

165

 

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த 3 விசேட காவல்துறைகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் பாவனை என்பன தொடர்பான தகவல்களும் பெறப்பட்டுள்ளது. இவ்விடையங்கள் தொடர்பான உடனடி நடவடிக்கை யெடுப்பதற்கு 3 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் நேரடியாக பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கலாம். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

குற்றச் செயல்கள் அவற்றை எதிர்கொண்டு தப்பித்துக்கொள்ளல் போன்றவை குறித்து மாணவர்களுக்கு வழிப்பூட்டும் செயற்றிட்டத்தையும் காவல்துறை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

SHARE