யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு கிராமத்தில் கற்ப்பூர உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு… வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து வைத்தார்.

346

 

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் 01 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு அக்கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கோடு இத்திட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது, இக் கற்ப்பூரம் உற்பத்தி செய்யும் நிலையத்தை 29-04-2015 புதன் காலை 10:30 மணியளவில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராசா வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான திரு.கஜதீபன் திரு.பரம்சோதி ஆகியோரும், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன், யாழ் உதவி அரசாங்க அதிபர் திருமதி.ரூபினி வரதலிங்கம், கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.பெலிசியன், நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வை நல்லூர் பிரதேச செயலாளர் திரு.செந்தில்நந்தனன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
unnamed (5) unnamed (8) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed (14) unnamed
SHARE