யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அரசாங்கம் உயர்ந்த பட்ச தண்டனை வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

322
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அரசாங்கம் உயர்ந்த பட்ச தண்டனை வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

மாணவி வித்தியாவின் கொலையினைக் கண்டித்தும், சட்ட நடவடிக்கையெடுக்கக் கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!

“யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்குட்டு படுகொலை செய்யப்பட்டது மிகவும் துன்பகரமான நிகழ்வாகும். வடக்கு கிழக்கு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யக் கூடிய வகையிலும் தமது மனித கௌரவம் பாதுகாக்கக் கூடிய வகையிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடக்கு கிழக்கு மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நல்லிணயக்கத்திற்காக முன் நிபந்தனையாக மாணவர்களின் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

சட்ட ரீதியான பாதுகாப்பை பெறும் உரிமை அவர்களது ஜனநாயக உரிமையாகும். கற்றபாடங்களும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரையில் வடக்கு கிழக்கு பெண்கள் ஜனநாயக உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு சட்ட ரீதியான இப்பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.

சிறுவர்களின் உரிமைகள் பற்றி சமவாயம் மனித உரிமைகளை முழு அளவில் குறிப்பாக சிறுவர்களுடன் தொடர்பான சமூக பொருளாதார கலாசார உரிமைகள் சேர்ந்த குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை வலியுறுத்துவதுடன் தனிநபரின் சட்டபூர்வமான அபிலாசைகளும் கௌரவமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் துன்பகரமான படுகொலையைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நல்லரசாட்சியின் சட்டவாட்சி என்பது தன் நபரின் சட்ட பூர்வமான அபிலாசைகளையும் கௌரவத்தையும் அடையக் கூடிய வகையில் சமூக, பொருளாதார, கலாசார சூழ்நிலையை வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு தமிழ் மாணவிகள் பாடசாலை மற்றும் தனியார்க் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் போது பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவது அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது.

பெண்களுக்கெதிரான அனைத்து பாராபட்சங்கள் பற்றிய சர்வதேச சமாவாயம் இலங்கை அரசியலமைப்பில் அடிப்படை உரிமையில் உள்வாங்கப்படுவதினை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துவதோடு இப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என எமது சங்கம் அரசை வலியுறுத்துகிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vithiya_001

SHARE