யாழ்ப்பாணம். வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் கைக் குண்டுத் தாக்குதல்- மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

425

 

யாழ்.பருத்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு – 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யவ்பர் தெரிவித்தார்.
அல்வாய் சிறிலங்கா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீதே இனம் தெரியாத நபர்களால் இந்த கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
 மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியட்சகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கைக்குண்டு எறியப்பட்ட இடத்துக்கு கபே உறுப்பினர்களை அங்கு அனுப்பி விசாரணைகளை மேற்கொண்டு கபே அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். அத்துடன் இதனால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என மேலும் தெரிய வருகிறது.
SHARE