யாழ்ப்பாண தொலைக்காட்சியின் இயக்குநருக்கு நீதிமன்றம் பிடியாணை!

312

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தார். இதன் வழக்கு விசாரணைக்காக தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. ஆனால் அவர் நீதிமன்றுக்கு சமுகமளிக்காதமையை அடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

SHARE