யாழ்.ஏழாலை ஸ்ரீமுருகன் மகா வித்தியாலயத்தின் தண்ணீர் தாங்கிக்குள் புல்லுக்கு தெளிக்கும் நஞ்சு விஷமிகளினால் கலக்கப்பட்டுள்ளதால் 28 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் தண்ணீரை அருந்திய நிலையிலே மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனர்.
இதனையடுத்து மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
குறித்த மாணவர்களின் நிலைமை தற்போது இயல்பு நிலைக்குத் திருப்பியுள்ளதுடன் மருத்துவ உதவிகளும் தற்போது வழங்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலைக்கான குடிநீர், தண்ணீபவுசர் மூலம் வழங்கப்படுவதுடன் தண்ணீர் வழங்கப்பட்ட பின்னரே இனம்தெரியாத விஷமிகள் நஞ்சைக் கலந்திருக்கலாம் என சுன்னாகம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.