யாழ், நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர் சந்தேகநபர்களில் ஒரு தொகுதியினர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்களை கடும் எச்சரிக்கையின் பின் தலா இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.
மேலும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரையான நேரத்தில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இனி இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டால் பிணை இரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை குற்றமற்றவர் என்று நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படாததால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது