யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயிலுள்ள பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவனொருவன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளான்.

323

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயிலுள்ள பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவனொருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளான். நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீடியோ ஆதாரத்தின் உதவியுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தில் இந்த மாணவன் நீதிமன்ற கதவை காலால் தள்ளுவது பதிவாகியுள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.

கடந்த 20ஆம் திகதி நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குழப்ப சம்பவத்தில் நீதிமன்ற கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 130 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மேற்கொண்ட வீடியோ விசாரணைகளின் பின்னர் 4 சந்தேகநபர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு யாழ.சிறையினில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Jaffna

 

SHARE