யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 44 பேர் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

277

R_DSCF8018

இதேவேளை பொலிஸ் காவலரண் மீதான தாக்குதல், யாழ். சிறைச்சாலை வாக னம் மீதான தாக்குதல், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 47 பேர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்களில் முதலாவது சந்தேகநபரான யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உட்பட 9 பேரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா சட்டத்தரணி எஸ். தேவராஜாவின் அனுசரணையுடன் ஆஜரானார்.

இதனைவிட ஏனைய சந்தேக நபர்களின் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், திருமதி ஜோய் மகாதேவன், வி.ரி. சிவலிங்கம், வி. விஜயரட்ணம், எம்.பி. எம். மாஹீர், ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை நாளை வியாழக்கிழமையும் நீதிமன்றத் தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 33 பேர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE