யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு TNAக்கும் அழைப்பு:-

587

article-1337246-04FD75C0000005DC-203_468x312

மஹிந்த அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தமிழ் உறவுகளைக்கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு அரசு நடத்தும் இந்த யுத்த வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

NYT2009042609180059C
கூட்டமைப்பினருக்கு கோத்தபாய ராஜபக்ஷவினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள – மும்மொழிகளிலான அழைப்பிதழில் ‘சுதந்திர நாட்டின் உரிமையை, சுதந்திர தேசத்தின் அழகினை, சுதந்திர உள்ளத்தின் மகிமையை இலங்கை நாட்டின் இளைய தலைமுறையினருக்கு மீட்டுத் தந்த வெற்றித் தருணத்தின் தளபதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு எதிர்வரும் மே 18ஆம் திகதி காலை 7.30 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மாத்தறை நகருக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாம்.

SHARE