யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை விமானம் மூலம் மீட்க சீனா நடவடிக்கை

301
யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களினால் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை சீன விமானத்தின் மூலம் பஹ்ரேனுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஹ்ரேனுக்கு அழைத்து செல்லும் இலங்கையர்களை சொந்தமான விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யேமனில் இடம்பெறும் பதற்றநிலை காரணமாக 91 இலங்கையர்கள் நிர்க்கதியாகியுள்ளனர் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

யேமன் வான்பரப்பில் சீன விமானங்கள் பயணிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத காரணத்தினால் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலும் நிர்க்கதியான 3 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியதுடன், அவர்கள் தனிப்பட்ட ரீதியில் நாட்டிற்கு திரும்பியுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

 

SHARE