மும்பை: தேசிய கீதம் பாடலுக்கு எழுந்து நிற்காத ரசிகரை தாக்கினார் பிரீத்தி ஜிந்தா. ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள பாலிவுட் படம் ‘பேங் பேங். இப்படத்தை பார்ப்பதற்காக மும்பை சினிமா தியேட்டருக்கு வந்தார் நடிகை பிரீத்தி ஜிந்தா. படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் திரையிடப்பட்டது. உடனடியாக மரியாதை நிமித்தமாக பிரீத்தி ஜிந்தாவும் மற்றவர்களும் எழுந்து நின்றனர். ஆனால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் மட்டும் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார். இதைக்கண்ட பிரீத்தி ஜிந்தா கோபம் அடைந்தார். அந்த ரசிகரை எழுந்து நிற்கும்படி சைகை காட்டினார். அதை பொருட்படுத்தாமல் ரசிகர் அமர்ந்திருந்தார். இதனால் கோபம் அடைந்த பிரீத்தி அந்த ரசிகரை தாக்கினார். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பதா என்று திட்டியதுடன் அவரை தியேட்டரிலிருந்து வெளியே இழுத்து தள்ளினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம்பற்றி இணைய தளங்களில் சூடாக கருத்து பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. ஒரு தரப்பினர் பிரீத்தியின் தேசிய பற்றுக்கு ஆதரவாக வாதம் செய்கின்றனர். மற்றொரு தரப்பு பிரீத்தியின் செயலை விமர்சித்து வருகின்றனர்.