ரசிகர்களுடன் ஆட்டோ கிராப் போட்டு கலகலப்பாக இருந்த அஜித்

20

 

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருப்பவர்.

இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. இப்படத்தை தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடந்து வந்தது, அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும், எங்கே நடக்கும் என அதிகமாக தகவல்கள் வெளியாவதில்லை.

தற்போது அஜித் சிறிய ஆபரேஷனுக்கு பிறகு மீண்டும் தனது பைக் டூரை தொடங்கியுள்ளார்.

வைரல் வீடியோ
இந்த நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் கலகலப்பாக ஆட்டோ கிராப் போட்டு சிரித்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் அழகான சிரிப்பு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நம்ம நினைக்கிறத விட நம்ம அஜித் சார் ரொம்ப Friendly Person போல !

 

SHARE