ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் அஜித்..

146

 

கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் நீடித்து நிற்கும் முன்னணி நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது.

ஏகே 61 படம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

அண்மையில் துப்பாக்கி சூட் போட்டிக்காக திருச்சி சென்று நான்கு தங்க பதங்கங்களையும், இரண்டு வெங்கல பதக்கங்களையும் வென்று வந்தார் அஜித்.

அங்கு தன்னை காணவந்த ரசிகர்களுக்கு சற்று நேரம் ஒதுக்கி தம்சப் காட்டிவிட்டு சென்றார்.

ரசிகர்களுடன் போட்டோஷூட்
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் தனது ரசிகர்களுக்கு பல மணி நேரம் நின்று போட்டோஷூட் நடத்தியுள்ளார் அஜித்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது #30YearsOfAJITHISM எனும் ஹாஷ் டேக்கில் வைரல் ஆகி வருகிறது.

SHARE