புலி படம் செப்டம்பர் 17ம் தேதி வருவதாக இருந்தது, ஆனால், ஒரு சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோ பாடல் வருவதாக கூறினார்கள்.
சில பிரச்சனைகளால் இப்பாடல் இன்று மதியம் வந்தது, இருந்தாலும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.
ஏனெனில் இந்த பாடலை கடந்த சில நாட்களாகவே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பி வருகின்றனர். மேலும், இதில் விஜய் தோன்றவே இல்லை, முழுவதும் தேவி ஸ்ரீ பிரசாத்தே வர, ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.