ரஜினியின் பெயரை கெடுக்கிறாரா தனுஷ்?

158

ரஜினியின் அடுத்த வாரிசு என அறிவிக்க தான் இல்லை, மற்றப்படி தனுஷ் அவரை போலவே தான் எல்லா படங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி ஆரம்ப காலத்தில் சிகரெட்டை ஸ்டைலாக பிடித்து தான் ரசிகர்களை கவர்ந்தார்.

dhanush_rajini001

பின் அதன் விளைவை அறிந்து இனி என் படங்களில் நான் சிகரெட்டை தொட மாட்டேன் என கூறினார். தற்போது இவரின் மாப்பிள்ளை தனுஷ் பல படங்களில் சிகரெட் ஊதிக்கொண்டே தான் நடிக்கின்றார். அதிலும் மாரி படத்தில் சொல்லவே வேண்டாம்.

இதனால், தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் தனுஷிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் ‘இளைஞர்களை தன் பக்கம் அதிகம் வைத்திருக்கும் தனுஷ், உங்கள் நடிப்பை நான் மிகவும் ரசிக்கிறேன்.

உங்கள் வளர்ச்சி மிகவும் நன்றாக உள்ளது, ஆனால், இனி உங்கள் படங்களில் புகைப்பிடிப்பது போன்று காட்சிகளை வைக்காதீர்கள், உங்கள் மாமனார் ரஜினியே இதை தவிர்த்து விட்டார்.

நீங்களும் அதை விட வேண்டும், இல்லையெனில் ரஜினி பெயர் கெடும்’ என கூறியுள்ளார்.

SHARE