ரணிலுக்கு சீனாவின் பிரதமர் லீ கெகியாங் வாழ்த்து!

324

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதை சீனாவின் பிரதமர் லீ கெகியாங் வாழ்த்தியுள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை மற்றும் புதிய அரசின்கீழ் இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் மிகவும் வெற்றிகரமான நிலையை எட்டும்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- “சீனாவும் இலங்கையும் காலத்தைக் கடந்த நல்ல நண்பர்கள். இருதரப்பும் தந்திரோபாய ஒத்துழைப்பு இணைப்பை ஏற்படுத்தியுள்ளன. இது நேர்மையான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் என்றும் நீடிக்கக்கூடிய நட்புறவைக் கொண்டது. இதன்கீழ் அனைத்து சாத்தியமான துறைகளிலும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய ஒத்துழைப்பு காணப்படுகின்றது. இது இரு நாடுகளின் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளினதும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும்.. சீன அரசு இலங்கையுடனான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றது. மேலும் அதனை விஸ்தரிக்கவும் ஆர்வம் கொண்டுள்ளது”

SHARE