ரணிலுக்கு வெட்கமில்லை திருமணம் முடிக்காத 10 இளைஞர்களைஅனுப்பி வைக்குமாறு கோரினார்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

492
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனக்கு எதிராக சேறுபூசி வருவதாகவும் எவ்வித வெட்கமும் இன்றி, தன்னிடம் இரண்டு பாதுகாப்பு ஜீப் வண்டிகளையும் 10 இளம் பொலிஸாரையும் கேட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் இளைய சகோதரர் சாலிய திஸாநாயக்கவிற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது, அங்கு கூடியிருந்த அமைச்சர்களிடம் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

உண்மையில் ரணிலுக்கு வெட்கமில்லை. என்னை விமர்சித்து கொண்டே, என்னிடம் இரண்டு வாகனங்களை கோரினார். 10 அமைச்சரவை பாதுகாவலர்களை கேட்டார்.

திருமணம் முடிக்காத 10 இளைஞர்களை ரணிலுக்கு அனுப்பி வைக்குமாறு நான் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்தேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மரண வீட்டுக்கு வந்திருப்பதையும் மறந்து விட்டு ஜனாதிபதி பலமாக சிரித்து பேசியதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்த முடியாதளவில் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாகவே அவர் புதிய வாகனங்களை கோரியுள்ளதாக விசாரித்ததில் தெரியவந்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சித் தலைவரின் சுற்றுப் பயணங்கள் அதிகரிக்கும் என்பதால், மேலதிகமாக 10 அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரிகளை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவருடன் தான் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக காண்பிப்பதற்காகவே ஜனாதிபதி பகிரங்கமான இடத்தில் வைத்து இவ்வாறு கூறியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

SHARE