ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ரணில் பிரதமராக பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பி்டத்தக்கது.
மஹிந்த உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பங்கேற்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பஙகேற்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது. நிகழ்வின் முன் வரிசை ஆசனமொன்றில் மஹிந்த அமர்ந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் இந்த நிகழ்வில் பங்கேற்றபதற்காக வருகை தந்தார்.
இதேவேளை ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ல் சரத் பொன்சேகாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் முக்கியஸ்தர்களும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கரு ஜயசூரிய, அர்ஜுண ரணதுங்க, மேயர் முஸம்மில் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காகுமாரதுங்க இந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை.
இன்று பதவிப் பிரமாணம் மேற்கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க , 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை வகிக்கப்போகும் முதலாமவர் என்ற பெருமைக்குரியவராகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.