அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் சமூகங்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றியீட்டினால் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வேன்.
நாடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்லக்கூடிய வகையிலான ஓர் தலைவராக கடமையாற்ற எதிர்பார்க்கின்றேன்.
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்.
சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன் என ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரையும் ரணில் லண்டனில் சந்தித்து பேசியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.