ரயில்களில் கறுப்புப்பெட்டி வேண்டும்: குமார வெல்கம

478
நவீன ரயில்களில் கறுப்புப்பெட்டி பொருத்தப்பட்டிருப்பதனால் பொத்துஹெர சம்பவம் தொடர்பில் யார் குற்றவாளி என்பது விரைவில் தெரிய வரும். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான குற்றவாளி யாராக இருப்பினும் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

இதேவேளை, பொத்துஹெர விபத்திற்கு ரயில் ஊழியர்களின் கவனயீனமே மூல காரணம். இச்சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் ஏனைய விசாரணைகளிலும் கறுப்புப்பெட்டி பெருமளவில் உதவும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE