ரஷ்யாவின் அதிநவீன ராணுவ டாங்கியை சுக்குநூறாக்கிய உக்ரைன்!

17

 

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக போரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் ரஷ்யா முன்னெடுத்து வரும் தாக்குதலால் ஏராளமான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு பல உலக நாடுகளும் ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவும் உக்ரைன் மீது தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக உக்ரைன் படைகளும் கடுமையாக எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரின் அதிரடியான தாக்குதலில் ரஷ்யாவின் T-90M ரக அதிநவீன இராணுவ டாங்கியை தாக்கி அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ராணுவ டாங்கியை உக்ரைன் வீரர்கள் ராக்கெட் வீசி தாக்கிய நிலையில் அது வெடித்து வானுயர கரும்புகை எழுந்தவாறாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE