ரஷ்ய நடத்திய குண்டு தாக்குதலில் உக்ரைன் கார்கிவில் 15 பேர் உயிரிழப்பு!

9

 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24-ம் திகதி இருந்து தாக்குதலை தொடுத்து வருகின்றது. மேலும் இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது.

இருப்பினும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை நடந்து வருகிறது.

உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.

இந்த நிலையில், கிழக்கு கார்கிவ் பகுதியில் நேற்று ரஷ்ய குண்டு தாக்குதலில், 8 வயது குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டதாக ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆளுநர் மேலும் கூறியதாவது,

ரஷ்ய குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். காங்கிவ் பகுதியில் ரஷியா பகர்நேர ஷெல் தாக்குதலின் பயங்கரமான விளைவுகள் இதுவாகும்.

இதுபோன்று ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன.

இது பயங்கரவாதம். இவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள். அவை தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

SHARE