ராகிங் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.

502
]
 

சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த யோகலட்சுமி என்பவர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை பயின்று வந்தார்.

2ம் ஆண்டு மாணவியான யோகலட்சுமியை 3ம் ஆண்டு படிக்கும் கோடீஸ்வரி என்ற மாணவி பாலியல் ரீதியாக ராகிங் தொல்லையளித்து தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார்.

இதனால் மனம் நொந்த யோகலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுடன், தனது மரணத்திற்கு கோடீஸ்வரி தான் காரணம் என்றும் தனது நாட்குறிப்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து யோகலட்சுமியின் தந்தை கமலக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கோடீஸ்வரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE