தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அந்த மனநிலையில் இருந்து 100 சதவீதம் மாற்றப்பட்டுள்ளார்கள் என உறுதியளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்தது மாபெரும் வெற்றி என்பது போலவே கே.பியை பிடித்ததும் பெரிய வெற்றியென என அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாத நடவடிக்கை இல்லாத போதிலும், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்றே வருவதாகவும் ராஜபக்ஸ குடும்பத்தை தகர்ப்பதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்காக காணப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ராஜபக்ஸ அரசாங்கம் மட்டுமல்ல, இலங்கையில் ஆட்சி மாற்றமடைந்தாலும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விசேடமாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள், ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரகசியமான செயற்பாடுகள் தற்போதும் காணப்படுகின்றன.
குறிப்பிட்ட தரப்பினரை போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லும் நோக்கம் இன்னும் கைவிடப்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.